செவ்வாய், 15 ஜூலை, 2014

படிப்பு பெருமை இல்லாத காமராசரின் படைப்புப் பெருமை -பெரியார் பேருரையாளர் இறையனார்



            ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பு பணியாற்றியவட்டார வளர்ச்சி அலுவலர்கள் எனபோரின் பொறுப்பில் மாவட்டஆட்சியரின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே ஓராசிரியர் பள்ளிகள் என்பவைதிறக்கப்படடன.  “ வேலையற்றோர் நிவாரணத் திட்டம் ” எனும் பெயரில்ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.  “ Planning Commission Schools under unemployment Relief Scheme ” என்று அவை ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன.

            1950- களில் உயர்நிலைப்பள்ளி நீக்கப் பொதுத் தேர்வில்  வெற்றிபெற்று (அந்த நாள்களில் அதுவே குறிப்பிடத்தக்க போதிய படிப்பு !)வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர்களாகஅமர்த்தப்பட்டனர்.  ஆசிரியர்ப் பயிற்சி பெறாதோர் அவர்கள் என்பதுகவனத்திற்குரியது.  பயிற்சி பெற்றோராகவே போட வேண்டுமென்றுகுறியாக இருந்திருந்தால அக்காலத்தில் அவ்வளவு பேர் கிட்டியிருக்கமாட்டார்கள்.  ஒரு சில ஆண்டுகளில் அந்த ஆசிரியரனைவரும்முறையான ஆசிரியர்ப் பயிற்சி பெற்றுத் திரும்புமாறு ஏற்பாடுசெய்யப்பட்டு விட்டது ! படிப்படியாக ஓராசிரியர் பள்ளிகளில் இரண்டு -மூன்று ஆசிரியர்கள் இடம் பெறும் நிலை உண்டாக்கப்பட்டு விட்டது.

            அந்தக் கால கட்டத்தில் தமிழக அரசின் கல்வித் துறையில் ஆசிரியராக முதலில் அமர்த்தப்பட்ட நான்குறுகிய காலத்தில் பள்ளி ஆய்வாளனாக மாற்றப்பட்டுத தொண்டாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்எனவே பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்தில் எனக்கு நேரடிப் பட்டறிவு உண்டு.  300-க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழும் சிற்றூர்களைக் கண்டுபிடித்து அந்த ஊர்களிலெல்லாம் பள்ளிகளை அமைக்கும் பெரும்பணியினைப் பள்ளி ஆய்வாளர்களாக இருந்தோர் நன்கு உழைத்து நிறைவேற்றினர்.

            பள்ளிகளை நிறுவினால் மட்டும் போதுமா?  அன்றாடங் காய்ச்சிக் குடும்பங்களைச் சேர்ந்த பாலர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கு என்ன உறுதி?  பள்ளிக்கு ஒரு வேளை வந்தாலும் பட்டினியால் வாடும் வறிய குடும்பங்களில் பிறந்த சிறு பிள்ளைகள் பசியுடன் பாடங் கேட்டால் பயன் விளையுமா?  இதை ஆழமாய்க் கருதிப் பார்த்த காமராசர் ஏழைக் குழந்தைகட்கு இலவசமாக்ப் பகலுணவு வழங்கும் திட்டத்தினைச் செயற்படுத்தினா.  கல்வியலுவலர்கள் பகலுணவுத் திட்ட அரசு உதவித் தொகைகளுக்கான காசோலைகளை எடுத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் விரைந்து அவற்றைத் தலைமையாசிரியர்களிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.

            ஊராட்சி ஒன்றியங்கள் உருவான பிறகு படிப்படியான முறையில் மூன்று ஆண்டுகளில கட்டாயக் கல்வித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார் காமராசர்.   அந்தக் கட்டத்தில் ஒன்றியங்களில் அமர்த்தப்பட்டிருந்த கு()முகக் கல்வியலுவலர்களின் துணையோடு ஊர் ஊராகச் சென்று பெற்றோர்களைக் கூட்டி சங்கம் அமைத்துதமிழ்ச் சிறார்களைக் கல்வி பயில வைப்பதில் சரகக் கல்வியதிகாரிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்துக் காட்டினர்.

            1959- ஆம் ஆண்டிலிருந்து  62- ஆம் ஆண்டுவரை அருப்புக்கோட்டையிலும்விருதுநகரிலும் பணியாற்றிய எனக்குப் பெருந்தலைவர் காமராசரோடு அணுக்கமாய் பழகுகின்ற நல்வாய்ப்பு நிறையக் கிட்டியது.

            அதற்கும் முந்தியே அப்பெருந்தலைவரிடம் ஒரு சிறு அளவில் நான் அறிமுகமாகியிருந்தேன்பறம்புக்குடி மன்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நாற்பது ஆண்டுகட்குமுன் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வருகை புரிந்த முதலமைச்சர் காமராசரைப் போற்றும் பாடலொன்றை இயற்றி அதை மாணாக்கரே ஆர்வம் மேலிடப் பாடுமாறு ஏற்பாடு செய்திருந்தேன்இசையின் இனிமையாலும் பாட்டினுள் அடங்கியிருந்த ஆட்சியின் அருஞ்செயல்களை சுட்டிக் காட்டும் பட்டியலாலும்  அவ்வகையில் உணர்ச்சி வயப்பட்ட  காமராசர் அப்பாடலை என்னிடமிருந்து பெற்று 10,000 படிகள் அச்சிடுமாறு,தம்முடன் வந்த சட்ட மன்ற உறுப்பினரை வேண்டிக் கொள்ளும் விந்தை அப்போது நேர்ந்தது.  மேலும் கல்வி ஆய்வு அலுவலராக நான் மாற்றமுற்ற பின்னர் அய்ந்தாண்டுத் திட்ட விளக்க நடவடிக்கைகளில் நானும் நிறையப் பங்கேற்க வாய்த்ததால் மாவட்ட ஆட்சியர்,துணையாட்சியர் போன்ற அதிகாரிகளிலிருந்து கீழ்மட்ட அலுவலர்வரை அரசின் பல துறையினர்க்கும் நான் தெரிந்தவனானேன்.

            அந்த நிலையில் முதலமைச்சர் முகவை மாவட்டப்  பகுதிகளில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட வேளைகளில் உடன் செல்லும் அதிகாரிகளின் பரிவாரக் குழுவில் நானும் அடங்கி அவரின் நல்லெண்ணத்தைப் பெறும் நிகழ்ச்சிகள் நடந்தனபள்ளிச் சீரமைப்பு மாநாடுசீருடைகள் வழங்கு மாநாடுபுத்தகப் பை வழங்கு மாநாடு போன்று நாங்கள் ஏற்பாடு செய்த பல மாநாடுகளில் கலந்து கொண்ட முதல்வர் அம்முயற்சிகளைப் பேருவகையோடும்பூரிப்புடனும் பாராட்டி ஊக்குவித்த செய்திகள் இங்கு தேவையில்லை.  பல சிற்றூர்களில் எவ்வாறு திடீர்ப்பள்ளிகள் முளைத்தன என்பதை மட்டும் குறிப்பிட வேண்டும்.

            மக்களிடம் குறை கேட்கும் சுற்றுப் பயணங்களில் காமராசரிடம் அக்காலத்திய் சிற்றூர் மக்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானவையாக இருந்தவை மூன்று.  மின்சாரம்இணைப்புச் சாலைபள்ளி என்பவையே அவை.  நிலையான பரந்த ஒளியை ஊர் முழுதும் பாய்ச்சவல்ல மின்சாரம் தங்களின் சுவையற்ற - சந்தம் மாறா வழமையான நாட்டுப்புற வாழ்வுக்குப் புதிய வெளிச்சம் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர்  - சலித்துப் போயிருந்த மக்கள் முதன்மைச் சாலைகளைச் சென்றடைய வெறும் ஒற்றையடிப் பாதைகளையும் கரடுமுரடான பழைமையான வண்டிப் பாதைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள்முறையான இணைப்புச்சாலை போடப்பட்டுவிட்டால் இன்றியமையா உடனடி உதவிகட்காகப் பேருந்துகள் ஓடும் சாலையை விரைந்தடைய எளிதாக  - ஏந்தாக விருக்குமென்று சரியாகவே அவர்கள் கற்பனை செய்தனர்.  அடுத்த ஊரில் இருக்கும் பள்ளிக்குத் தம் பிஞ்சுகளை அன்றாடம் அனுப்பி வைப்பதிலுண்டான தொல்லைகள் நீங்கும் வண்ணம் தம் ஊரிலேயே பள்ளியொன்று திறக்கப்பட்டால் தம் பிள்ளைகள் எழுதப் படிக்க மட்டுமாவது அடிப்படைக் கல்வி பெற்றுவிட முடியுமே என ஆர்வப்பட்டனர் பெற்றோர்.

            காமராசர் அந்தச் சூழ்நிலையில் எப்படி வினையாற்றினார் என்பது ஆர்வத்தூண்டவல்ல - வழக்கமீறிய தனித்தன்மையான செய்தி ! அரசின் பணவொதுக்கீட்டிற்கிணங்க இணைப்புச்சாலை அமைப்பதற்கான வாய்ப்புபற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அவ்வூருக்கெனத் தனியே ஒரு பள்ளி நிறுவுவதற்கான கல்வித் துறை நெறிகள் குறித்து என்னிடமும் (பிற பகுதிகளில் உரிய கல்வி அலுவலரிடமும் ) கலந்து பேசிய பின்பு,குழுமிய மக்களிடம் முதல்வர் இப்படிக் கூறுவார்.

            “ மின்சாரம் வந்து கொண்டேயிருக்கின்றதுதமிழ் நாட்டின் அத்தனை சிற்றூர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின்சாரம் வழங்கிவிட வேண்டுமென்று அரசு முழு மூச்சாக முயற்சியில் இறங்கியுள்ளது.  ஆகவேஉங்களுக்கு இன்னும் சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.  இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்அடுத்துஇணைப்புச்சாலைபற்றி உங்கள் பிடிவிடம் பேசினேன்.கையிருப்பில் உள்ள நிதி ஒதுக்கீட்டிற்குத் தகுந்தபடி கூடிய விரைவில் செய்து விடுவதாக அவர் உறுதி கூறியிருக்கிறார்.  மூன்றாவதாக நீங்கள் கேட்டுள்ள பள்ளிக் கூடத்தை இதோ இங்கு இருக்கிறாரே இன்ஸ்பெக்டர், (என்னை புன்னகையுடன் சுட்டிக் காட்டிஇவர் நினைத்தால்  - அந்த சட்டம் இந்தச்சட்டம் என்று இடையூறு செய்யாமல் இருந்தால் - டிஅவர்களின் ஒப்புதலோடு உடனடியாக ஒரு துணைப் பள்ளிக்கூடத்தையாவது இங்கு உண்டாக்கிவிட முடியும்.  சட்டங்களைக் காட்டி அதிகாரிகள் செய்யும் குறுக்கீடுகளால்தான் உடனடியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது ! “

            இப்படிப் பேசி எங்களை நோக்கிச் சிரித்துக் கொண்டே கண் சிமிட்டி விட்டுச் சற்று நிறுத்துவார் பெருந்தலைவர்.

            நான் அடக்கத்துடன் எழுந்து நின்று ஆனாலஅச்சமின்றி,உரிமையுணர்வோடு கருத்துரைப்பேன், “ பெருமதிப்பிற்குரிய முதல்வரய்யா அவர்கள் குறிப்பிட்டபடி சட்டம என்று எடுத்துக் கொண்டால் இந்த ஊரில் பள்ளி உண்டாகவே முடியாது.  இவ்வூர் மக்கள் தொகை 300 -க்கும் குறைவுதான்.  அருகிலேயே ஒரு கல்தொலைவுக்குள் தொடக்கப்பள்ளி இருக்கிறது.  ஆனால் இக்குடியிருப்பிலிருந்து 20 - க்கு மேற்பட்ட சிறுபாலர்கள் அன்றாடம் நடந்து சென்று அப்பள்ளியில் படித்துவிட்டு வீடு திரும்பும் நிலை கவலையளிக்கக் கூடியது.  இரண்டு ஊர்களுக்கும் இடையே ஏதேனும் வாய்க்கால் உள்ளதாஎன்று நான் இங்கே கேட்டபோது,  ஓர் ஓடையுண்டு என்றார்கள்,  அந்தக் காரணம் போதும்ஓடையில் நீர் ஓடுவதுண்டாஎன்பதைப் பற்றிக் கருதாமல்,இயற்கைத் தடை (Natural barrier) இருப்பதாக இக்குடியிருப்பில் துணைப்பள்ளி (Feeder School) யொன்றைத் திறக்க நான் பரிந்துரை செய்ய முடியும்” .

            என் கருத்துரையில் பொதிந்து  கிடக்கும் பல பொருள்களை எண்ணிமுதல்வர் முக மலர்ச்சியோடு,  “ ரொம்ப சந்தோசம் இதற்காகத்தான் இந்த இன்ஸ்பெக்டரை கையோடு கூட்டிக் கொண்டு வருகிறேன்.  அவரின் பரிந்துரையை மாவட்டக் கல்வி அதிகாரி மறுக்கமாட்டார்அப்புறமென்ன?  இங்கேயே இப்போதே பள்ளிக்கூடத்தைத் திறந்து விடலாம்னேன் ! ” என்றுரைத்து,  “ ஊர்காரங்க கேட்ட மூன்றில் ஒன்றை உடனடியாகத் கொடுத்தாச்சய்யா”  என அறிவிப்பார்.

            காமராசர் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான  பள்ளிகள்,எப்படியெல்லாம் முளைத்தன என்னும் வரலாற்றை இன்றைய இளைஞர் தங்கள் மூளைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினாலேயே இவற்றை எழுத நேர்ந்தது.  தற்போது வாழும் தமிழக மக்களில் பாதியளவுப் பேர் காமராசர் தோற்றுவித்த பள்ளிக் கழனிகளில் விளைந்திட்ட பயிர்களே.  தமிழக அரசின் வருவாயில் காற்பங்கினைக் கல்வித்துறையில் அந்த நாள்களில் நீண்ட கால திட்டமாக அவர் முதலீடு செய்ததன் பலன்களைத்தான் இந்த நாள்களில் நாடு நுகர்ந்து கொண்டிருக்கிறது.  அவரின் படைப்பாற்றல் இது.

            “ காத்தருளி  காமராசர் ” என்பதாக தந்தை பெரியார்அழைத்த தொலைநோக்கினையும்பொருத்தத்தையும் தற்காலத் தமிழ்த் தலைமுறையினர் தேர்ந்து தீர்மானிக்கட்டும்! .

வெள்ளி, 28 மார்ச், 2014

தி. மு.க வின் தேர்தல் அறிக்கை



நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை யொட்டி தி.மு.க. வெளியிட்டுள்ள நூறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை என்பது வரலாற்றுப் பெட்டகம்!

அரசியலில் ஈடுபடும் ஒரு திராவிட இயக்கம் - தன் விழுமிய வேர்களை மறந்து விடாமல், அதன் சித்தாந்தங்கள் - கோட்பாடுகளின் அடிப்படையில் இதைவிடச் சிறப்பாகத் தீட்டப்பட முடியாது என்று கூறும் வகையில், இந்தத் தேர்தல் அறிக்கை செப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது  என்றே சொல்ல வேண்டும்.

நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவை என்று எதிர்பார்க்கப்படும் தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.
தேர்தல் அறிக்கையின் முன்னுரையே - நூறு அம்சத் திட்டத்தின் முகப்படாமாக - முத்திரையடியாக ஜொலிக்கிறது!


  • முழு ஜாதிவாரி கணக்கெடுப்பு.



  • மகளிருக்கு 33ரூ நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடஒதுக்கீடு.



  • நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.



  • அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம்.



  • மத்திய நிதிநிலை அறிக்கையில் 10 விழுக்காடு நிதி குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகளுக்கு ஒதுக்கீடு.



  • திருநங்கைகளுக்கு தேசிய அளவில் மாற்றுப் பாலின அங்கீகாரம்.



  • சிறுபான்மையினருக்கு நலம் பயக்கும் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துதல்.



  • அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (ஆக்ஷஊ) தனி  ஒதுக்கீடு.



  • தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு ஸமழு இலவசக் கல்வி.
  • தாழ்த்தப்பட்டோர் வீட்டு வசதி வாரியம்.

  • நெசவாளர் நலன்கருதி அவர்களுக்கான கலால்வரி, சிட்டா நூல் வரிகள் நீக்கம்.

  • வேலைதேடி வெளிநாடு செல்வோர் நலன்கருதி இந்திய தூதரகங்களில் தனிப்பிரிவு.

  • தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தூதர்களாக தமிழர்களையே நியமிக்க வலியுறுத்தல். 
  • தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினம், மகேந்திரகிரி பகுதிகளில் வேலை வாய்ப்பளிக்கும் திட்டங்கள்.

  • தமிழக மீனவர்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம்.

  • தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் தமிழ்.



  • நதிகள் தேசிய மயமாக்கல் மற்றும் இணைப்பு.



  • மத்திய அரசு வரியில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தல்.

கல்விக் கடன்கள் முழுமையும் தள்ளுபடி.

  • தொழிலாளர் நலத்திட்டங்களைக் கண்காணிக்க தேசிய கண்காணிப்பு ஆணையம்.



  • இந்திய அளவில் 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு.

  • பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கல்வி மாற்றம்.

  • விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்க மாநிலங்களுங்கு உரிமை.

புதன், 26 மார்ச், 2014

தி.மு.கழகம் பங்கேற்ற பத்தாண்டுகால மத்திய அரசில் தமிழகம் பெற்ற பயன்கள்!



அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான்  தமிழ்,  செம்மொழி என்ற தகுதியைப்பெற்றது;

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்தது,

கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம்  56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச்செலவில்,  4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில்,  3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மேம்பாடு;  மிகப்பெரிய மேம்பாலங்கள்,  துறைமுக விரிவாக்கப்பணிகள், சரக்குப்பெட்டக முனையங்கள்,  நீர்வழிப் போக்கு வரத்து வசதிகள் அமைந்தன. ஃ சென்னைக்கருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி  உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் அமைத்தது.


1553 கோடி ரூபாய்ச்செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.


120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

1650 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
2427 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத்திட்டப்பணிகள் தொடக்கம்.

நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

பொடா சட்டம் ரத்து.

அனைத்து கிராமங்களிலும் முழு  கணினி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம்.

30 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி.

மாதம் ஒன்றுக்கு 120 இலட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள்.

செல்போன் கட்டணங்கள் குறைப்பு.

தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

சென்னைக்கருகில் பன்னாட்டுத்தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.
 ஃ திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்.

ஆசியாவிலேயே  முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.

சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.),

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசில் இடம் பெற்ற தமிழகத்தின் 13 அமைச்சர்களும் பல்வேறு செயல் திட்டங் களை இந்தியாவின் பொருளாதார வளர்ச் சிக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றி உள்ளனர். இந்திய அளவில் கடந்த காலங்களில் பெறமுடியாத அளவிற்குத் திட்டங்களின் மொத்த செலவுத் தொகையான ரூ. 3,70,000 கோடியில், தமிழ்நாடு 11 விழுக்காட்டுப் பங்கினைப் பெற்றுள்ளது. இதுவரை தமிழ்நாடு பெறாத அளவுக்கு அதிக நிதியினைப்பெற்று தமிழ்நாட்டில் 69 மத்திய அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சனி, 27 ஏப்ரல், 2013

மே தினமும் திராவிடர் கழகமும



       சுயநலமும் தந்திரமுமே கருத்து ஆக, ஆணவப்போக்கில் முற்றிய அகங்காரமே செயல் ஆக பாடுபட்டுழைக்கும் பாட்டாளித் தோழர்களை பயப்படுத்தியும், மிரட்டியும் வேறு பாதை அறியாத செக்கு மாடுகளாகப் பழக்கி, வாழ்க்கையில் உடல் துன்பமேயறியாத உன்மத்தர்களாய், ஆண்டவனின் அவதாரங்களாய் இருந்த அரசர்களும், குட்டி ராஜாக்களும், ஆண்டவனோடு இரண்டறக் கலக்கும் அற்புதப் பணியை நடத்தி வைக்க, பகலிரவு என்பதைப் பாராமல் உழைக்கும் பண்புடையவர்களாய், அவனருளாலே அவனால் அனுப்பி வைக்கப்பட்ட மத குருமார்களும், அவர்களுக்குத் துணை செய்ய அவனருளால் அவன் இச்சையின்படி சேர்த்து வைக்கப்பட்ட கன்னிமாடப் பெண்களும் தொலைந்து, அழிக்கப்பட்டு அவனருள், அவன் செயல், அவன் இச்சை, அவன் அவதாரம் என்பதெல்லாம் அர்த்தமற்ற சொற்களாக்கி, மனிதனருள், மனிதன் செயல், மனிதன் இச்சை, மனிதன் பிறப்பு என்கிற அர்த்தம் விளங்குகிற சொற்களைக் கையாண்டு மனித ஆட்சி, மனித நடத்தை என்பவைகளைச் செயலுக்கு கொண்டு வந்து உழைப்பவனுக்கே உலகம் என்று உரிமைச் சீட்டு எழுதிய நாள் இந்த நாள்.

    மனிதனின் உழைப்புக்கு மதிப்புக் கொடாமல், மனிதத்தன்மையைப் பற்றிக் கவலைப்படாமல், பொதுவுக்கு நன்மையைக் கொடுத்தும் அறிவுக்கோ, ஒழுக்கத்துக்கோ இடம் கொடுக்காமல் வேஷதாரிகளான மதவாதிகளும் அவர்களின் பாதுகாவலர்களான முடிதாங்கிய, தடிதூக்கிய அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்த சரத்துகளின்படி, உனக்கும் பேப்பே! நொப்பனுக்கும் பேப்பே! என்று ஏமாற்றி வந்த குள்ள நரித்தனத்திற்கு விடுதலைச் சீட்டுக் கொடுத்து, உழைப்புக்கும், நேர்மைக்குமே உலகமுண்டு, வாழ்வுண்டு! ஊதாரி வாழ்வுக்கு இடமில்லை காண்பீர்! என்று முழக்கிய மே முதல் நாள் இந்த நாள்.
இந்த நாள் வாழ்க! இதன் அடிப்படை உலகின் ஒரு பகுதியுடன் இல்லாமல் உலகம் முழுவதும் வியாபித்து நிற்க இந்த நாள் வளர்க! ஓங்குக! மதத்திமிரும், அதிகாரத்திமிரும் ஓங்கி உயர்ந்து உச்சாணிக் கிளையிலிருந்து உலுக்கிக் கொண்டிருக்க, அந்தக் குரங்குப் பிடியை ஓட்டி விடும் முயற்சி உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறுகிறது என்கிற அடையாளமே, இந்த மே தினம். இன்று உலகின் பல பகுதிகளிலும் விழா நாளாகக் கொண்டாடப்படுகிறது எனலாம்.
           உலகத்தின் பல நாடுகளிலேயும் இந்த மே தினம் கொண்டாடப்படுகிறதென்றால், அதனால் ஏதாவது ஒரு பயன் ஏற்படுகிறதென்றால், கொண்டாடுவதற்கான காரணமும், கொண்டாடுகிற முறையும், கொண்டாடுவதனால் விளையும் பயனும் நாட்டுக்கு நாடு வேறுபட்டே காணப்படுகின்றது என்பதையும், சில நாடுகளில் வெறும் அய்தீக அளவில்தான் கொண்டாடப்படுகின்றது என்பதையும் மே தின விரும்பிகளான நம் நாட்டுத் தோழர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

            மே தினம் ஒரு புரட்சி நாள். உண்டு கொழுக்கும் சோம்பேறிக் கூட்டத்திற்கு இடமில்லாமல், ஆண்டவன் திருவிளையாடல் நிகழும் அக்கிரமத்திற்கு இடம் இல்லாமல், பாப புண்ணிய அடிப்படையில் உலக மக்கள் என்கிற போக்கை மாற்றி, பாடுபடுபவன், பாடுபடாதவன் என்கிற அடிப்படையில் அதாவது தலைகீழ் மாற்றமான அடிப்படையில் நடத்திய புரட்சி வெற்றி பெற்ற நாள் இந்த மே தினம். மே தினம் விரும்பும் தோழர்கள் இந்த அடிப்படையை முதலில் மனதில் கொள்ளவேண்டும்.
மே தினம் உற்சவ நாளாக, உத்தமர்கள் அவதாரம் செய்த நாளாக, புண்ணிய நாளாக அந்த மனப்போக்கில் கொண்டாடப்படுமானால் அது பெரும் ஆபத்து. இதையும் மே தின விரும்பிகள் நெஞ்சில்  கொள்ள வேண்டும்.
இந்திய உபகண்டத்தில் இந்த மே தினம் கொண்டாடும் வழக்கம், ஏறக்குறைய 20 ஆண்டுகளாகப் புகுந்திருந்தாலும், திராவிட நாட்டில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்போதே தலைவர் பெரியார் அவர்கள் மே தினம் கொண்டாட வேண்டிய அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி அறிக்கை வெளியிட்டும், மேடைகளில் பேசியும் வந்திருக்கின்றார்கள். நம் சுயமரியாதைத் தோழர்கள் அந்த முறையைப் பின்பற்றி மே தினம் எப்படி அமெரிக்கப் பாட்டாளிகளின் மேன்மைக்கு வழி வகுத்த தினமாக மாறியது என்பதை விளக்கி வந்திருக்கின்றார்கள், விளக்கியும் வருகின்றார்கள்.

         இன்று இந்தியக் கம்யூனிட் தோழர்களும், சமதர்ம வீரர்களும் ஆங்காங்கே போட்டி போட்டுக் கொண்டு இந்த மே தின ஆர்ப்பாட்டம் செய்வதை கேட்கிறோம். இந்திய யூனியனின் காங்கிர அரசாங்கமும், தொழிலாளர்கள் விரும்பினால் இதை விடுமுறை நாளாக விட்டு விடுமாறு, அதாவது தனக்கும் இந்த மே தினத்தில் ஈடுபாடுண்டு என்பதைக் காட்ட உத்தரவு செய்திருக்கிறது.
மே தினத்திற்கும் பார்ப்பனப் பண்ணையான காங்கிர ஆட்சிக்கும் எப்படி எந்த வகையில் தொடர்பிருக்க முடியும்? பார்ப்பன பனியாக்களின் கூட்டாட்சிக்கு மே தினம் எப்படி அனுதாபத்துக்குரியதாகத்தான் இருந்து விடமுடியும்? பூசுரர்களின் தலையில் கொள்ளி வைத்து பூசுரர்கள் பூண்டையே இல்லாது  ஒழித்த மே தினம், பூசுரர்களால் எப்படி வரவேற்கப்படமுடியும், பூசுரத் தலைமைக்குள்ளான கம்யூனிடுகளும், சோஷியலிடுகளும்தான் அதை எப்படி மனமொப்பி வரவேற்று அதன் உண்மைத் தத்துவத்தை அங்கீகரித்துவிட முடியும்?

       அயல் நாட்டுக் கொள்கையின் பேரில், ருஷ்யாவின் கண்ணில் மண்ணைத் தூவுகிறோம் என்று எண்ணிக்கொண்டு, சமதர்ம சிங்கம் ஜவஹர்லால் ஆட்சியில் மேதின விடுமுறை விடப்படுவதிலே ஒரு பொருள் இருக்கின்றது என்று கொண்டாலும் கூட, மே தினத்தை அதாவது பூசுரர்களின் சல்லிவேர் பொசுக்கப்பட்ட நாளை, ஜோஷிப் பார்ப்பனர் ஆட்டி வைக்கும் கம்யூனிட் கட்சியோ, ஜெயப்பிரகாஷ் பார்ப்பனர் ஆட்டிவைக்கும் சோஷியலிட் கட்சியோ கொண்டாடுவதை, ஏமாற்றம், பித்தலாட்டம் என்கிற முறையைத் தவிர, வேறு எந்த நியாயமான முறை என்று கூறிவிட முடியும்? என்று கேட்கிறோம்.
வர்க்க ரீதியான போராட்டம் என்ற பெயரால், தொழிலாளி - முதலாளி ஆகிய இருவருடைய இருவேறான நிலையையும் அழிந்துபடாமல் காப்பாற்றி, தொழிலாளி தொழிலாளியாகவே பிறந்தான்; தொழிலாளியாகவே வாழ்வான்; தொழிலாளியாகவே சாவான். அதற்கு நாங்கள் கியாரண்டி, ஆனால் தொழிலாளிக்குக் கூலி உயர்வு கொடு! என்று முதலாளிகளிடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு தொழிலாளர்களிடத்தில் பேரம் பேசும் இந்தியக் கம்யூனிட்டுகளை இந்த ஒப்பந்தத்திற்காக அல்லது முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயுள்ள தரகர்களான தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஏழைக்குடும்பங்கள் பட்டினி கிடந்து பலர் சோத்துக்கில்லாமலும் துப்பாக்கி முனையாலும் செத்துமடிய காரணகர்த்தர்களாக இருக்கும் இந்தியக் கம்யூனிடுகளைத் தீவிரமாகக் குறை சொல்லும் சமதர்ம வீரர்களின் யோக்கியதைதான் என்ன? கம்யூனிடுகளைவிட இவர்களின் நடத்தை, நாணயம் எந்த வகையில் மேம்பட்டு விட்டது என்று சொல்லி விட முடியும்? வருணாசிரம முறையை அழித்தொழிக்க மனதாலும் எண்ணாதவர்கள்; மக்கள், மக்கள் என்ற தத்துவத்தை அழித்து அதாவது மக்களுக்குள் சமவுரிமையை ஒப்புக்கொள்ளாது அதற்கு விரோதமாக இருக்கும் சாதிரம், சட்டத்தைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாதவர்கள்; அவனியின் போக்குக்கு ஆண்டவர்களும், ஆண்டவர்களின் அருள் பெற்ற ஞானிகளும், ரிஷிகளும் வழிகாட்ட வேண்டுமென்று எண்ணுகிறவர்கள், பேசுகிறவர்கள்; மூடநம்பிக்கையும், மூடப்பழக்க வழக்கங்களும் தொழிலாளர்களிடையே அழியாமல் குலையாமல் அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்பி அதை நாகரிகம் என்ற போர்வையைப் போர்த்திக் கையாண்டு வருகின்றவர்கள்; சுருக்கமாக தொழிலாளி தொழிலாளியாகவே இருக்க வேண்டுமென்று நம்பி அதற்கான வழிகளிலே காரியம் செய்யக் கூடியவர்கள்; என்று சொல்லக் கூடிய அளவில்தான், இந்தியக் கம்யூனிடுகளும், இந்திய சோஷியலிடுகளும் நடைமுறையில் செய்து கொண்டு வருகிறார்கள்.

      இந்த மாதிரியான போக்குடையவர்கள் மே தின விரும்பிகள் என்று காட்டிக் கொள்வதினால் உருப்படியான பிரயோஜனம் ஒன்றுமில்லை என்பதை நாம் எடுத்துக் காட்டினாலும்கூட இந்த மேதின அடிப்படையை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். மே தினம் என்பதை எண்ணும் போதே அது தலைகீழ்ப்புரட்சி என்பதுதான் நினைவுக்கு வரவேண்டும் என்பதையும் கூறுகிறோம். மே தினம் என்பதை கேட்கும் போது, வாழத் தெரிந்த பாட்டாளி வாழ வழி செய்துகொண்ட நாள் என்பதுதான் நெஞ்சில் இடம்பெற வேண்டும்; மே தினத்தின் உணர்ச்சி, இழிவுணர்ச்சியையும் தன்னம்பிக்கை இல்லாத போக்கையும் சாகடிக்கும் மான உணர்ச்சியாக வளரட்டும்; வளர்ந்து மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் துணை செய்யட்டும் என்பவைகளையும் நாம் வற்புறுத்திக் கூறுகிறோம்.

          இந்த மே தின வெற்றியை நம்நாட்டில் அனுபவரீதியில் கொண்டாட வழிவகுத்து, அதற்கான காரியத்தில் இடைவிடாது உழைப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதைத் திராவிடத் தோழர்களான மே தின விரும்பிகள் நிச்சயித்துக் கொள்ள வேண்டுமென்பது நம் விருப்பம்.
விஞ்ஞான ரீதியில் பகுத்தறிவைத் துணைகொண்டு பாடுபடும் பாட்டாளிக்கே பாராளும் உரிமையும், பாங்குடன் வாழும் உரிமையும் உண்டு என்பதை வற்புறுத்தும் ஒரு இயக்கம் உண்டு என்றால், அது ஒரே ஒரு திராவிடர் இயக்கந்தான் என்பதை மே தின விரும்பிகளுக்கு நாம் ஞாபக மூட்டுகிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 01.05.1948

வியாழன், 3 ஜனவரி, 2013


மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை அறிக்கை !



காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிடுவது மத்திய அரசின் இயல்பான கடமையாகும். அதை வெளியிடக் கூட தயங்கும் நிலையில், மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது 2007 ஆம் ஆண்டு!
காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக நடுவர் மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியவர் - மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது - மத்தியில் சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள்.
அதன்படி இடைக்கால நிவாரணமாக அந்நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்தது!
தொடக்கத்திலிருந்தே, கருநாடக அரசு இதன்படி, ஒரு சில ஆண்டுகள் தவிர, முழுமையாக நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்கவில்லை.
கருநாடகம் எந்தச் சூழலில் தண்ணீரைத் திறந்துவிடும் தெரியுமா?
வறட்சி ஏற்படும் காலத்தில் பங்கீடு எப்படி என்ற Distress Formula- வையும் பின்பற்றியும் நடந்துகொள்ளவே இல்லை.
நடுவர் மன்றத்தையே ஒப்புக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும், அவசரச் சட்டம், பிறகு தனிச் சட்டம், வழக்கு, தாவா என்றெல்லாம் திட்டமிட்டே தண்ணீரைத் தர மறுத்தே வந்துள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி போன்ற அணைகளில் குடகு பகுதியில் ஏராளம் மழை பெய்து, கருநாடகத்தில் உபரி மழைநீர் வெள்ளத்தைத் தடுக்க முடியாது என்ற நிர்பந்த நிலையில் மட்டுமே அவர்களது அணைகளைக் காப்பாற்றும் பொருட்டே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுவது சில ஆண்டுகளில் நடந்தது!
இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து 2007 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தரப்பட்டது. அதன்படி, 419 டி.எம்.சி. (தமிழ்நாடு கேட்டது 562 டி.எம்.சி.) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி. (அது கேட்டது 465 டி.எம்.சி.), கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு 10 டி.எம்.சி. தனி ஒதுக்கீடாக (Reserved) வைக்கப்பட்டது.
128 முறை பேச்சுவார்த்தை
முன்பு பேச்சுவார்த்தைகள் இரு மாநிலங்களுக்கிடையே 127 முறை; சில வாரங்களுக்கு முன் ஒரு தடவை ஆக, சுமார் 128 தடவை நடைபெற்றும், உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லையே.
உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணைய ஆணைப்படிகூட விடப்படும் நீரின் அளவால் தமிழ்நாட்டிற்குக் குறுவை சாகுபடியை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடிய நிலையில், 2 பகுதி நடைபெறாமலும், சம்பா பயிர் நட்டும் காய்ந்து, கருகி வாடியதாலும், மனமுடைந்த காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 12-க்குமேல் பெருகியும் வந்துள்ள நிலையில்கூட, மேற்சொன்ன உச்சநீதிமன்ற ஆணைக்கும் கட்டுப்படாமல், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்குக் கட்டுப்படாமல் தண்ணீர் தர மறுத்து அடம் பிடிக்கிறது கருநாடகம்.
கருநாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில்!
சற்றும் மனிதாபிமானம் அற்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர இயலாது என்று அடம் பிடிக்கிறது கருநாடக அரசு. (வாக்கு வங்கி அரசியல் முழு முதற்காரணம்) அங்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே அணி; ஒரே குரல் அங்கே! அந்த முதலமைச்சர் 10 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமரைச் சந்திக்க சர்வக் கட்சிக் குழு என்ற நடைமுறை கருநாடகத்தில்.
தமிழ்நாட்டில், அது அறவே இல்லை; எல்லாம் முதலமைச்சர் நினைப்பதுதான்! எத்தனைக் கட்சிகள் கோரிக்கை வைத்தும், இப்பிரச்சினையில் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமுறை கூட கூட்டப்படவே இல்லை.
இங்கும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுங்கட்சியும், மற்றவர்களும் பரஸ்பர குற்றச்சாற்று வைத்து அரசியல் நடக்கும் அவலமான நிலை!
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு (நடுவர் மன்றத்தின்) வந்த 90 நாள்களில் மத்திய அரசின் கெசட்டில் வெளியிட்டிருக்கவேண்டிய நடுவர் மன்றத் தீர்ப்பு - 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசால் வெளியிடப்படாத வேதனையான நிலை!
அரசிதழில் வெளியிட்டால்...
இப்படி வெளியிட்டால்தான் அத்தீர்ப்புக்கு சட்ட வலிமை ஏற்படும்; அப்படி வெளியிட்ட பிறகு நடுவர் மன்றம் முடிந்துவிட்டதாகவும், அதன்படி பிரதமர் தலைமையில் அமைந்த காவிரி நதிநீர் ஆணையமும் தானே முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்.
உடனடியாக தீர்ப்பு செயல்படுத்தப்படவேண்டியதாகி விடும்.
இதனைக் கருநாடக அரசு வேண்டுமென்றே எதிர்க்கிறது.
அதனை மத்திய அரசு கெசட்டில் வெளியிடவேண்டும் என்பது சட்டப்படி கடமை. சலுகையோ, விருப்பத்தையொட்டியதோ அல்ல; கட்டாயம் வெளியிடப்படவேண்டியதாகும்.
சில வாரங்கள் முன்பு உச்சநீதிமன்றமே உரத்த குரலில் மத்திய அரசு வழக்குரைஞரைப் பார்த்து, ஏன் இன்னும் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளீர்கள் என்று கேட்டு, அதற்கு விரைவில் வெளியிடுவோம் என்று கூறி பல வாரங்களுக்குமேல் ஓடிவிட்டன!
மத்திய அரசின் போக்கு...
இப்போதும் மத்திய அரசின் போக்கு பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் காட்டுவது மாதிரி தட்டிக் கழிக்கும் வகையில், சில செய்திகளை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது என்று கசிய விடுவது, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், சட்டக் கடமைக்கும், உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது  - கண்டிப்பாக விரோதமானதே!
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நொண்டிச்சாக்கு - அடிப்படையற்றது. (அந்த உச்சநீதிமன்றம்தானே கெசட்டில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது).
ஸ்டே ஏதாவது உள்ளதா? உச்சநீதிமன்றம் இதை வெளியிடத் தடையா வழங்கியுள்ளது? இல்லையே! பின் ஏன் இந்த செப்படி வித்தை, ஜாலங்கள்?உடனடியாக வெளியிடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது - மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது தவிர்க்க இயலாது!
மத்திய அரசின் இயல்பான சட்டக் கடமையைச் செய்வதில்கூட, இப்படி ஓர் அரசின் அழுத்தமா தேவை?
வெட்கம்! மகாவெட்கம்!! வேதனை!!!

- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

திங்கள், 10 செப்டம்பர், 2012

நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்


நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்



  • பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன
  • துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.  ட குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25- நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
  • ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
  • ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
  • அருப்புக் கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
  • மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
  • கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
  • நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
  • பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
  • தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
  • ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
  • குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
  • ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
  • தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
  • மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
  • சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
  • கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
  • உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது, அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
  • மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ளுவயீநனே) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால், உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
  • சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.